பாசிப்பருப்பு - தயிர் பக்கோடா

பாசிப்பருப்பு - தயிர் பக்கோடா

தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப் (கடையவும்), பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த மிளகுப் பொடி, வறுத்த சீரகப் பொடி, சுக்குப் பொடி, பொடித்த கறுப்பு உப்பு - தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பாசிப் பருப்பை அலசி ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, வடை மாவு போல் அரைக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல், அரிசி மாவு சேர்த்து, கடைசியாக சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். இந்த மாவை சூடான எண்ணெயில் சிறுசிறு உருண்டைகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்து, பாத்திரத்தில் வைக்கவும். அதன்மேல் கடைந்த தயிரை ஊற்றி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து, வறுத்த மிளகுப் பொடி, வறுத்த சீரகப் பொடி, சுக்குப் பொடி, பொடித்த கறுப்பு உப்பு தூவி, தக்காளி சாஸ் தெளித்து உடனே பரிமாறவும்