பச்சை மிளகு ஊறுகாய் - Raw-Black-Pepper-Pickle
பல்வேறு வகையான ஊறுகாய்களை பார்த்து இருப்பீங்க. இன்று பச்சை மிளகு வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
மிளகு ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகு - 200 கிராம்,
எலுமிச்சைப்பழம் - 6,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். இதில் முற்றிய மிளகு உள்ளதாகப் பார்த்து வாங்கவும்.
இந்த மிளகை உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, எலுமிச்சைச்சாறு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
நன்றாக ஊறியதும் பச்சை நிறம் மாறி, மஞ்சள் நிறமாக ஆகும். அப்போது ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் கெட்டுப் போகாமல் இருக்கும். நீண்ட நாள்கள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
சிறப்பு: மிளகு, உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும்.