Showing posts with label வெந்தயக்களி. Show all posts
Showing posts with label வெந்தயக்களி. Show all posts

வெந்தயக்களி

வெந்தயக்களி


என்னென்ன தேவை?

அரிசி மாவு - முக்கால் கப்,
வெந்தயத்தூள் - கால் கப்,
வெல்லம் அல்லது கருப்பட்டி - ஒன்றரை கப்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்.

எப்படி செய்வது?

வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும். அரிசி மாவு, வெந்தயத்தூள் இரண்டையும் கலந்து ஒன்றரை கப் நீரில் கரைத்துக்கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து சூடாக்கி, கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லக் கரைசலைச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் ஊற்றி, மேலும் கிளறி, மாவு ஒட்டாமல் வரும்போது இறக்கிப் பரிமாறவும்.சூட்டைத் தணிக்கும் அருமையான களி இது