Showing posts with label சுரைக்காய் கோஃப்தா. Show all posts
Showing posts with label சுரைக்காய் கோஃப்தா. Show all posts

சுரைக்காய் கோஃப்தா

சுரைக்காய் கோஃப்தா

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – ஒரு கப் (துருவியது)
வேகவைத்த உருளைக்கிழங்கு – இரண்டு (மசித்தது)
வறுத்த பொட்டுகடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
பிரட் தூள் – மூன்று டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் துருவிய சுரைக்காய், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, வறுத்த பொட்டுகடலை மாவு, கரம் மசாலா, பிரட் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான சுரைக்காய் கோஃப்தா ரெடி