Showing posts with label தக்காளி - வெள்ளரி சாலட். Show all posts
Showing posts with label தக்காளி - வெள்ளரி சாலட். Show all posts

தக்காளி - வெள்ளரி சாலட்

தக்காளி - வெள்ளரி சாலட்

தேவையானவை:

கசப்பு இல்லாத வெள்ளரிக்காய் (பெரியது) - ஒன்று, நன்கு பழுத்த தக்காளி - 2 , பெரிய வெங்காயம் - ஒன்று, எலுமிச்சைப் பழம் - ஒன்று, மிளகுத்தூள் - சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வெள்ளரிக்காயின் மேல் தோலை சீவி மெல்லிய, நீள துண்டுகளாகவும், தக்காளி, வெங்காயத்தை ஒரே அளவு துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும். பாசிப்பருப்பை உதிர் உதிராக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகள், பாசிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போடவும். மேலே மிளகுத்தூள், உப்பு தூவவும். எண்ணெயில் கடுகை தாளித்து சேர்க்கவும். பரிமாறுவதற்கு சற்று முன் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.