Showing posts with label பாசிப்பருப்பு இனிப்பு இட்லி. Show all posts
Showing posts with label பாசிப்பருப்பு இனிப்பு இட்லி. Show all posts

பாசிப்பருப்பு இனிப்பு இட்லி

பாசிப்பருப்பு இனிப்பு இட்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு – ஒரு கப், பச்சரிசி – அரை கப், சர்க்கரை – ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, நெய் – அரை கப்.

செய்முறை:

பருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, சற்று கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் தேங்காய்த் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், சமையல் சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, இட்லித் தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி ஆவியில் வேகவிடவும். கையில் ஒட்டாமல் வந்ததும் எடுக்கவும்.
சூடாக சாப்பிட்டால்… அசத்தலான சுவையில் இருக்கும்.