Showing posts with label கறிவேப்பிலை-பால் சூப். Show all posts
Showing posts with label கறிவேப்பிலை-பால் சூப். Show all posts

கறிவேப்பிலை-பால் சூப்

கறிவேப்பிலை-பால் சூப்- செய்வது எப்படி?

கறிவேப்பிலை-பால் சூப்:

தேவையான பொருட்கள்;

கறிவேப்பிலை-1 தம்ளர்; பால்-அரை தம்ளர் ; பாசிப் பருப்பு-10 தேக்கரண்டி; லவங்கம்-2; வெங்காயம்-1 தக்காளி-1வெண்ணெய்-1 தேக்கரண்டி; மிளகுத் தூள், உப்பு.

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் பாசிப் பருப்பு, லவங்கம் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். இதை இறக்கி மிக்சியில் அரைத்து பால். மிளகுத் தூள், உப்பு சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கி சூடாகப் பருகலாம்.

மருத்துவப் பலன்கள்:

பித்தக் கோளாறுகளை நீக்கும்.
கண் ஒளியைத் தரும்.
தலைமுடி கருமையாக இருக்க உதவும்.
காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைத் தணிக்கிறது.