Showing posts with label அமிர்த கேசரி. Show all posts
Showing posts with label அமிர்த கேசரி. Show all posts

அமிர்த கேசரி

அமிர்த கேசரி

இந்த உணவு தொண்டாமுத்தூரை சேர்ந்த சமையல் நிபுணர் சாவித்திரி அவர்களால் ஒரு திருமண விழாவில் பரிமாறபட்டது.

தேவையான பொருட்கள் :

ரவை - 500 கிராம்
நெய் -250 மில்லி
கன்டன்ஸ்டு மில்க் ஒரு டின் (100 மில்லி)
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 150 கிராம்
முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) - 50 கிராம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
டூட்டி ஃப்ரூட்டி - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1.அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும்.

2.மிக்ஸியில் ஏலக்காய், கிராம்பு, சிறிது சர்க்கரை சேர்த்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.

3.கடாயில் சிறிது நெய் விட்டு ரவையைப் பொன்னிறமாக (பாதி வெள்ளை பாதி பொன்னிறமாக) வறுத்துத் தனியாக வைக்கவும்

4.அடுப்பில் வாணலியை வைத்துப் பாலை ஊற்றி அது கொதித்து வரும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

5.ரவை வெந்து கொதி வரும்போது
சர்க்கரையைச் சேர்த்து, தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்.

6. சர்க்கரை சேர்த்ததும் உருகி நீராகும். அப்போது ஏலக்காய்கிராம்புப் பொடி, ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, இறுதியாக நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.

7.பரிமாறும்போது ஒரு ஸ்கூஃப் கேசரி, அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, கன்டன்ஸ்டு மில்க், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை (கிஸ்மிஸ்) சேர்த்துப் பரிமாறவும்