Showing posts with label தக்காளி ஜாம். Show all posts
Showing posts with label தக்காளி ஜாம். Show all posts

தக்காளி ஜாம்

தக்காளி ஜாம்

தேவையானவை:

பழுத்த தக்காளி - 1 கிலோ
பச்சைமிளகாய் - 1
சர்க்கரை - அரை கிலோ
சிவப்பு ஃபுட் கலர் - ஒருசிட்டிகை
பன்னீர் - ஒரு டீஸ்பூன்
முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) - 10 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :

தக்காளி, பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். பெரிய கண்ணுள்ள (தேங்காய் பால் எடுக்கும் வடிகட்டி) வடிகட்டியில் தக்காளிக் கலவையை வடிக்கவும். தக்காளிச் சக்கையை மிக்ஸியில் மீண்டும் அரைத்து வடிக்கவும். இதனை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு சுண்டி வரும் போது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். ஜாம் சுண்டியதும் இறுதியாக நெய், பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை (கிஸ்மிஸ்) சேர்க்கவும் ஃபுட் கலர் பன்னீர் சேர்க்கவும். ஜாம் திரண்டு வந்ததும் இறக்கவும்.