Showing posts with label இஞ்சி - பூண்டு இல்லாத பிரியாணி. Show all posts
Showing posts with label இஞ்சி - பூண்டு இல்லாத பிரியாணி. Show all posts

இஞ்சி - பூண்டு இல்லாத பிரியாணி

இஞ்சி, பூண்டு இல்லாத பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப், தக்காளி - 5, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: நெய் - 3 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு.

செய்முறை:

பாசுமதி அரிசியை 3 கப் தண்ணீரில், அரை மணி நேரம் ஊறவையுங்கள். குக்கரில் நெய்யைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேருங்கள். நறுக்கிய தக்காளியையும் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து, அரிசியைத் தண்ணீருடன் சேருங்கள். தேவையான உப்பு போட்டுக் கலந்துகொள்ளுங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருப்பம் உள்ளவர்கள், தக்காளி வதக்கும்போது, ஒரு கை பட்டாணியையும் சேர்த்துக் கொள்ளலாம். கலர்ஃபுல்லாக இருக்கும்.