Showing posts with label உருளைக்கிழங்கு ஸ்டூ. Show all posts
Showing posts with label உருளைக்கிழங்கு ஸ்டூ. Show all posts

உருளைக்கிழங்கு ஸ்டூ

உருளைக்கிழங்கு ஸ்டூ

தேவையானவை:

உருளைக்கிழங்கு - கால் கிலோ, பச்சை மிளகாய் - 3, தேங்காய் - அரை மூடி, இஞ்சி - சிறிதளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி, தோல் சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கீறிய பச்சை மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல் தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.

இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.