Showing posts with label பாகற்காய் ஊறுகாய். Show all posts
Showing posts with label பாகற்காய் ஊறுகாய். Show all posts

பாகற்காய் ஊறுகாய்

பாகற்காய் ஊறுகாய் :!!!

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 2.
எலுமிச்சம்பழம் – 4.
உப்பு -ஒரு டீஸ்பூன்.
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.
பச்சை மிளகாய் -10.

செய்முறை:

பாகற்காயை நீளவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறிக்கொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் வைத்து, அது கொதிக்கும்போது பாகற்காய் துண்டுகளை அதில் போடவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உப்பு, மஞ்சள்தூள் போட்டு, பச்சை மிளகாயையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், இறக்கி ஆறவிடவும். எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, அந்தச் சாற்றை பாகற்காயில் சேர்த்துக் கிளறவும். பாகற்காய் அந்தச் சாற்றில் ஊறியதும், சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அருமையான இன்ஸ்டன்ட் ஊறுகாய் கிடைக்கும்.

பயன்:

வயிற்றில் பூச்சிகள் இருந்தால், முகம், கை, முதுகு போன்ற இடங்களில் தேமல் வரும். கண்ணிமையில் உள்ள முடி, சரியாக வளராமல் ஒட்டிக்கொள்ளும். இந்த ஊறுகாய் சாப்பிட்டால், பூச்சிகள் அழியும்.
தேமல் மறைவதோடு, இமை முடி நன்கு வளரும்.