Showing posts with label மாம்பழ மோர்க்குழம்பு. Show all posts
Showing posts with label மாம்பழ மோர்க்குழம்பு. Show all posts

மாம்பழ மோர்க்குழம்பு

மாம்பழ மோர்க்குழம்பு

தேவையானவை:

மாம்பழம் - ஒன்று, ஓரளவு புளித்த மோர் - 500 மில்லி, காய்ந்த மிளகாய் - 2, அரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து... மோருடன் கலக்கவும். இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு... எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.