பூரி செய்வது எப்படி?

பூரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

மைதாமாவு : 300 கிராம்
உப்பு : 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி

செய்முறை

மைதாவைச் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு ஒன்று சேரப் பிசைந்துவிட்டு பின் தண்ணீர் விட்டு பிசைந்து தனியே வைக்கவும். 30 நிமிடம் சென்ற பின் பூரி மாவை வட்டவடிவில் இட்டு வாணலியில் எண்ணெய் அல்லது டால்டாவில் பொரித்து எடுக்கவும்.

500மி.லி. மைதாவைப் பூரி மாவு பக்குவத்தில் பிசைவதற்கு சுமார் 4 அவுன்ஸ் அல்லது 100மி.லி. தண்ணீர் தேவைப்படும்.

பூரி செய்வதற்கு நாம் நயம் மைதாவை உபயோகிக்கலாம். மைதா மாவு பாதி கோதுமை மாவு பாதி என்றும் கலக்கலாம்.

பூரி மாவு மெதுவாக அமைய சிறிது வெண்ணெய் அல்லது சிறிது சூடு பண்ணிய எண்ணெய் சேர்த்துப் பிசையலாம். பூரி மாவை வெறும் தண்ணீரில் பிசையலாம். பால் அல்லது கெட்டியான தேங்காய்ப் பால் விட்டுப் பிசையலாம்.

பூரி மாவைப் பிசைந்து ஒரு ஈரத்துணியைப் போட்டு மூடி 60 நிமிடம் கழித்து சுட்டால் பூரி மெதுவாக இருக்கும்.