கொத்தமல்லி துவையல்

கொத்தமல்லி துவையல்

தேவையானவை:

கொத்தமல்லி - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெயை காய வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

இது... இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.