புளியானம்

புளியானம்

தேவையானவை:

கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் - ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய் எண்ணெயை சூடாக்கி... சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து... சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்