வெந்தயக் கீரை தோசை
தேவையானவை:
தோசை மாவு - அரை கிலோ,
சீரகம் - 25 கிராம்,
சோம்பு - அரை தேக்கரண்டி,
பூண்டு - 4 பல்,
வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.
செய்முறை:
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
மருத்துவப் பயன்:
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும்.
வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.