கருப்பட்டி பொங்கல்

கருப்பட்டி பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், கருப்பட்டி - கால் கிலோ, நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்.

செய்முறை:

பச்சரிசி, பாசிப் பருப்புடன் தேவையான நீர் சேர்த்து குழைய வேகவிடவும். கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசி - பருப்பு கலவை, கருப்பட்டி கரைசல் சேர்த்து தளர கிளறி எடுக்கவும். நெய் முழுவதையும் காய்ச்சி அதன் மீது ஊற்றி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.