வெல்ல புட்டு
தேவையானவை:
அரிசி மாவு - கால் கப்
தூளாக்கிய வெல்லம் - கால் கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
தூளாக்கிய ஏலக்காய் - 3
முந்திரி, பாதாம் - தலா 3
உலர்ந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் விடாமல் அரிசி மாவை இரண்டு நிமிடம் நிறம் மாறாமல் வறுத்து அடுப்பை அணைக்கவும். இதை ஒரு தட்டில் பரப்பவும். 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து சூடாக இருக்கும் மாவில் தெளித்துப் பிசிறவும். இதை இட்லிக் கொப்பரையில் 8 நிமிடம் வரை வேகவைத்து எடுத்து ஒரு தட்டில் பரப்பி, ஆற விடவும். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி அடுப்பை அணைத்து மாவில் சேர்த்துக் கிளறவும். இத்துடன் தேவையானவற்றில் மீதம் இருக்கும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கிளறி புட்டாக பரிமாறவும்.