கொள்ளு - கறுப்பு உளுந்து வடை

கொள்ளு - கறுப்பு உளுந்து வடை

தேவையானவை:

முளை விட்ட கொள்ளு - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்), பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்), நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை:

கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து... கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.