நியூட்ரி வீட் லட்டு
தேவையானவை:
வறுத்த கோதுமை மாவு - 3 கப் (கோதுமையைக் கழுவி, ஈரம் உலர்ந்தவுடன் வெறும் வாணலியில் வறுத்து, மெஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும்), பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பொடியாக்கிய சர்க்கரை - 2 கப், ரவையாகப் பொடித்த முந்திரிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - 2 கப், நெய், கெட்டியான பால் - சிறிதளவு.
செய்முறை:
தேங்காய் துருவலை நெய்யில் நன்கு வதக்கவும். பிறகு, கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும். உதிராமல் இருக்க சிறிது பால் தெளித்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டால், முந்திரியால் அலங் கரித்து பரிமாறலாம்.
எளிதில் செய்யக்கூடிய, ருசியான இந்த லட்டு, மிகவும் சத்துமிக்கது.