வாழைத்தண்டு மோர்க்கூட்டு

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை:

வாழைத்தண்டு – ஒரு துண்டு,
புளிப்பு இல்லாத தயிர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – ஒன்று,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும்.

அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும்.

குறிப்பு:

பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும்.

நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால், வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம்.