சிவப்பரிசி - தேங்காய்ப் பால் - பூண்டு கஞ்சி - Brown-Rice-Kanji

சிவப்பரிசி - தேங்காய்ப் பால் - பூண்டு கஞ்சி - Brown-Rice-Kanji

சிவப்பரிசி, தேங்காய் பால், பூண்டு, சுக்கு சேர்த்து செய்யும் இந்த கஞ்சி வயிற்றுப்புண்ணை ஆற்றும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

சிவப்பரிசி தேங்காய்ப் பால் பூண்டு கஞ்சி
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
முதல் தேங்காய்ப் பால் - அரை கப்
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்
பூண்டு - 15 பல்
சீரகம் வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
சுக்கு - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சிவப்பரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர், தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.

பிறகு அதில் முதல் தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆற்றும் சத்தான கஞ்சி இது.

கம்பு லட்டு -Kambu (Pearl Millet Laddu)

கம்பு லட்டு -Kambu (Pearl Millet Laddu)
சத்தான சுவையான ஸ்நாக்ஸ் கம்பு லட்டு

இந்த கம்பு லட்டை சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். இன்று இந்த லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


கம்பு லட்டு -Kambu (Pearl Millet Laddu)

           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753


கம்பு லட்டு
தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 2 கப்
வெல்லம் - 2 கப்
பாதாம் - 10
ஏலக்காய் - 10
பிஸ்தா - 10
முந்திரி - 10
திராட்சை - 10
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு

கம்பு லட்டு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

கொழுக்கட்டை வடிவில் அந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த கொழுக்கட்டையை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அது ஆறியவுடன் மிக்ஸியில் மாவாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா அனைத்தையும் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு எடுத்து அரைத்த மாவு, பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

கெட்டி பதத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை லட்டுகளாக பிடித்து எடுத்தால் சூடான சுவையான கம்பு லட்டு தயார்.

பச்சை மிளகாய் குழம்பு - Green Chilli Curry

பச்சை மிளகாய் குழம்பு - Green Chilli Curry
காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சிலருக்கு காரசாரமாக சாப்பிட பிடிக்கும். இன்று பச்சை மிளகாயில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பச்சை மிளகாய் - 15,

 புளி - சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க :

பச்சரிசி - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.

பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.

புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.

குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

பால் கொழுக்கட்டை Paal-kozhukattai - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

 பால் கொழுக்கட்டை Paal-kozhukattai - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:

 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


இந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்

 வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :

ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.

பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.

இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.

குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.

பலாக்காய் - Raw Jack fruit Chips - சிப்ஸ் செய்வது எப்படி?

பலாக்காய் - Raw Jack fruit Chips - சிப்ஸ் செய்வது எப்படி?
raw-jackfruit-chips.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பலாக்காய் சிப்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இன்று வீட்டிலேயே பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்  :

பலாச்சுளை பழுக்காதவை - 10,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :

பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.

உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.

இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.