Showing posts with label கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல். Show all posts
Showing posts with label கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல். Show all posts

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்

கொங்குநாட்டு உருளைக்கிழங்கு வறுவல்

தேவையானவை :

சின்ன உருளைக்கிழங்கு - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 50 கிராம்
மிளகாய்த்தூள் - 5 கிராம்
எலுமிச்சை - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 5 கிராம்
கரம்மசாலாத்தூள் - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
எண்ணெய் - 20 மில்லி
உளுந்து - 5 கிராம்
கடுகு - 5 கிராம்
பூண்டு - 3 பல் (நன்றாக இடித்துக்கொள்ளவும்)

செய்முறை :

உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்துக்கொள்ளவும். 3 கிராம் சோம்பு, 3 கிராம் சீரகம், கரம் மசாலாத்தூளை எடுத்து நன்றாக வறுத்து, இஞ்சி - பூண்டு விழுதுடன், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெயைச் சூடாக்கி உருளைக்கிழங்கைப் போட்டு அரைவேக்காடாகப் பொரித்து எடுக்கவும். பின், மீதம் இருக்கும் சீரகம், சோம்பு, உளுந்து, கடுகு, இடித்த பூண்டு போட்டு நன்றாக வதக்கி, பொரித்த உருளைக்கிழங்கை இதில் சேர்க்கவும்.