Showing posts with label பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு. Show all posts
Showing posts with label பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு. Show all posts

பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு

பூண்டு- கறிவேப்பிலை வெங்காய குழம்பு:!!!

தேவையான பொருட்கள்:

பூண்டு-5 பல்; கறிவேப்பிலை-1 கப்; வெந்தயம்-1 தேக்கரண்டி; கடுகு-1/2 தேக்கரண்டி; காய்ந்த மிள்காய்-4; சின்ன வெங்காயம்-1 கப்; தக்காளி-1; தனியா பொடி-1 மேஜைக் கரண்டி; எண்ணெய்-1 மேஜைக் கரண்டி; புளி-எலுமிச்சை அளவு; உப்பு-தேவையான அளவு;

செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை வறுத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணையை வாணலியில் விட்டு, கடுகு மற்றும் வெந்தயம் தாளித்து, பூண்டு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு சுருள வதக்கவும். பின் புளியைக் கரைத்து விட்டு, அரைத்த கறிவேப்பிலை விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறக்கும்போது, தனியாத் தூளை சேர்க்கவும்.

இது பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் ஏற்றது.