Showing posts with label முள்ளங்கி வடை. Show all posts
Showing posts with label முள்ளங்கி வடை. Show all posts

முள்ளங்கி வடை

முள்ளங்கி வடை

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு கப்

முள்ளங்கி தோல் சீவி நறுக்கியது – கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி – கால் டீஸ்பூன் (நறுக்கியது)

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முக்கால் மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிய கடலை பருப்பு, முள்ளங்கி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து முக்கால் பாகம் அரைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவையுடன் வெங்காயம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி வடை போல் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.