கேழ்வரகு - ஜவ்வரிசி கொழுக்கட்டை

கேழ்வரகு - ஜவ்வரிசி கொழுக்கட்டை

தேவையானவை:

கேழ்வரகு மாவு, ஜவ்வரிசி - தலா அரை கப், பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, ஜவ்வரிசியைப் போட்டு நன்றாகப் பொரியும் வரை வறுத்து எடுத்து, தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளில் ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைய விட்டு வடிகட்டி வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, கேழ்வரகு மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிடவும். இதில் வடிகட்டிய வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், ஊறிய ஜவ்வரிசி, ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். வாணலியின் சூட்டுக்கே மாவு கெட்டியாகிவிடும். ஆறியவுடன் மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.