கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி,
பச்சரிசி மாவு - கால் கிலோ,
கருப்பட்டி - 100 கிராம்,
சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6,
சுக்கு - ஒரு துண்டு,
தேங்காய் - அரை மூடி.
செய்முறை:
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும்.
பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.
மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து.
உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும்.
ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.