சரவணப் பாயசம்

சரவணப் பாயசம்

சரவணப் பாயசம் என்றும் அழைக்கப்படும் இது, முருகன் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும்.

தேவையானவை:
பச்சரிசி - 250 கிராம்
வெல்லம் - 500 கிராம்
தேங்காய் - கால் மூடி (பல்லு பல்லாக நறுக்கவும்)
வாழைப்பழம் - 3 (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
நெய் - 250 மில்லி
ஏலக்காய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இளநீர் - 1
பச்சைக் கற்பூரம் - 1
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைத்து, பச்சரிசியைக் கழுவிச் சேர்த்து வேக விடவும். அது வெந்து லேசாக உடைய ஆரம்பிக்கும்போது வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் இறக்கி இளநீர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.