தக்காளி பச்சடி

தக்காளி பச்சடி

தேவையானவை:

துவரம்பருப்பு கால் கப், மஞ்சள்தூள் 1 சிட்டிகை, பழுத்த தக்காளி 4, சின்ன வெங்காயம் 1 கைப்பிடி, பச்சை மிளகாய் 2, கறிவேப்பிலை 1 ஆர்க்கு, சாம்பார் பொடி 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, மல்லித்தழை அரை கப், எண்ணெய் 3 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் 1.

செய்முறை:

தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்துகொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்கவும். இறக்கும்போது நறுக்கிய மல்லித்தழையையும் தூவி கொதித்ததும் இறக்கிவிடவும். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும், சாதத்துக்கு தொட்டு சாப்பிடவும் ஏற்ற பச்சடி இது.