வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்

தேவையானவை:

வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, புளி, துவரம் பருப்பு - தலா 100 கிராம், கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். இதில், புளியைக் கரைத்து ஊற்றி, கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும். கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

பலன்கள்:

குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத் தூண்டும். சருமத்தைப் பொலிவாக்கும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.