அரைக்கீரை மசியல்

அரைக்கீரை மசியல்

கீரை உடலுக்கு குளிர்ச்சியானது மட்டுமின்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கியதும் கூட. அத்தகைய கீரையை வாரம் 2-3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் அரைக்கீரையை மசியல் செய்து சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சரி, இப்போது இந்த அரைக்கீரை மசியல் எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த மாதிரி சமைத்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை - 1 கட்டு (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

நெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கீரையுடன சேர்த்து கலந்தால், அரைக்கீரை மசியல் ரெடி!!!