எலுமிச்சை சூப்..!!!
தேவையானவை:
எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி, காய்கறி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதில் சிறிது மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு மல்லித்தழை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும் (ரொம்ப தண்ணியாக இருந்தால் சோள மாவு கரைத்து சேர்த்து கெட்டியாக்கிக் கொள்ளவும்). அடுப்பை அணைத்து, கொதிக்க வைத்த கலவையில் எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கரண்டியால் கிளறவும். சிறிது நேரம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால், சூப் சூடாக இருக்கும்போதே இரண்டு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து சூப்பில் ஊற்றிக் கிளறி பரிமாறலாம்.