கத்தரிக்காய் பஜ்ஜி
தேவையானவை:
பெரிய கத்தரிக்காய் - 1, கடலை மாவு - 1 கப், மைதா மாவு - 1 டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - அரை சிட்டிகை.
அரைக்க:
இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல், சோம்பு - 1 டீஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள். அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள். இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள். கடலை மாவுடன் உப்பு, அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, ஒவ்வொரு துண்டையும் மாவில் அமிழ்த்தி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்