பட்டாணி புலவு

பட்டாணி புலவு

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப், பட்டாணி - அரை கப், பெரிய வெங்காயம் - 2, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: பட்டை - 1, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
அரைக்க: பச்சை மிளகாய் - 4, புதினா - ஒரு கட்டு, மல்லி - அரை கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 5 பல்.

செய்முறை:

ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்தெடுங்கள். பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயம் சேர்த்துக் கிளறுங்கள். சிறிது உப்பையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, பட்டாணியையும் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறுங்கள். பச்சை வாசனை போக வதங்கியதும், உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடி போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறுங்கள். ஹோட்டல் ‘பீஸ் புலாவ்’ எல்லாம் தோற்றுப் போகும்.