வாழைப்பூ துக்கடா

வாழைப்பூ துக்கடா

தேவையானவை:

நரம்பு நீக்கிய வாழைப்பூ - ஒரு கப், கடலைமாவு - அரை கப், அரிசிமாவு, சோளமாவு, - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல்சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பூவை நீளமாக அப்படியே ஒரு அகன்ற பாத்திரத்தில் போடவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, பெருங்காயம், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் எல்லாம் சேர்த்துப் பிசறி, கடைசியாக சிறிது நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சேர்த்து உதிர் உதிராக பொரித்தெடுக்கவும். பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிட சுவையாகவும் இருக்கும்.