வாழைத்தண்டு பக்கோடா

வாழைத்தண்டு பக்கோடா

தேவையானவை:

நார் எடுத்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்-தூள், நறுக்கிய வாழைத்தண்டு, மல்லித்தழை எல்லாவற்றையும் சிறிது நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்-ததும் சிறு சிறு பக்கோடாக்-களாக போட்டு பொரித்து எடுக்கவும்.