வாழைக்காய் பொடி
தேவையானவை:
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக நறுக்கிப் போட்டு உப்பு சேர்த்து, மூழ்கும்வரை நீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் தோலை உரித்து வாழைக்காயை கைகளால் மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். பொடித்ததை வாழைக்காய் மசியலில் தூவி கலந்துவிடவும்.