எண்ணெய் கத்தரிக்காய்
என்னென்ன தேவை?
கத்தரிக்காய் - 1/4 கிலோ (டார்க் வயலெட் நிற கத்தரிக்காய்),
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். கத்தரிக்காயை முழுதாக எடுத்துக் கொண்டு, அதன் கீழ்ப்பகுதி சேதமடையாமல் ஒரு பூ வடிவில் நறுக்கிக் கொள்ளவும். அதனுள் வறுத்து, அரைத்த பொடியை ஸ்டஃப் செய்யவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த ஸ்டஃப்டு கத்தரிக்காயை அடுப்பில் இருக்கும் கடாயில் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து பொறுமையாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்தால் வேக வைக்கும் போது அடிப்பிடிக்காமல் இருக்கும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து அவ்வப்போது கத்தரிக்காயை நன்றாகக் கிளறி விடவும். சாதாரண கத்தரிக்காய் என்றால் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்