மலபார் ஸ்பெஷல்: கூட்டு கறி

மலபார் ஸ்பெஷல்: கூட்டு கறி

கூட்டு கறி என்பது மலாபார் ஸ்டைல் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. பொதுவாக இந்த கூட்டு கறியை ஓணம் பண்டிகையன்று செய்வார்கள். இது மிகவும் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட். அதிலும் இதனை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஓணம் ஸ்பெஷல் மலபார் ஸ்டைல் கூட்டு கறியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சுண்டல் - 1 கப் (வேக வைத்தது)
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
வாழைக்காய் - 1 (தோல் சீவி, வேக வைத்தது) சேனைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது)
கேரட் - 1/2 கப் (நறுக்கியது)
பூசணிக்காய் - 1/2 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மசாலாவிற்கு...

தேங்காய் - 1 கப் (துருவியது)
வரமிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்த பொருட்களை வாணலியில் போட்டு, லேசாக வறுத்து, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அனைத்து காய்கறிகளையும் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின் விசிலானது போனதும், மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து, 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள கலவையில் ஊற்றி கிளறிவிட்டால், சூப்பரான கேரளா ஸ்டைல் கூட்டு கறி ரெடி!!!

ஹரியாலி சமோசா

ஹரியாலி சமோசா

மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிட பல ரெசிபிக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சமோசா. சமோசாவை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை காய்கறிகள் கொண்டு செய்வதால் தான். மேலும் சமோசாவானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். அந்த வகையில் இப்போது ஹரியாலி சமோசாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதனை டீ அல்லது காபி குடிக்கும் போது செய்மு சாப்பிட்டு, மாலை வேளையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கி, வேக வைத்தது) அவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் அவல் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின் ஒரு பௌலில் சிறிது மைதா மாவை போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சிறு சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் கூம்பு வடிவத்தில் செய்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து, முனையை மைதா பேஸ்ட் உதவியால் மூடிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான ஹரியாலி சமோசா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ஹரியாலி சமோசா

ஹரியாலி சமோசா

மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிட பல ரெசிபிக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சமோசா. சமோசாவை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை காய்கறிகள் கொண்டு செய்வதால் தான். மேலும் சமோசாவானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். அந்த வகையில் இப்போது ஹரியாலி சமோசாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதனை டீ அல்லது காபி குடிக்கும் போது செய்மு சாப்பிட்டு, மாலை வேளையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கி, வேக வைத்தது) அவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் அவல் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின் ஒரு பௌலில் சிறிது மைதா மாவை போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சிறு சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் கூம்பு வடிவத்தில் செய்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து, முனையை மைதா பேஸ்ட் உதவியால் மூடிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான ஹரியாலி சமோசா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு

ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள கசப்புத் தன்மையால், உடலில் தங்கியுள்ள பூச்சிகள் அனைத்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். அதிலும் இந்த பாகற்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். அந்த வகையில் இப்போது ஆந்திரா ஸ்டைலில் எப்படி பாகற்காய் குழம்பு வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 4-5 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் - 4
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 1/4 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாகற்காயை நீரில் கழுவி விட்டு, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு வேண்டிய அளவில் நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து கிளறி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், வரமிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காயை போட்டு 4-5 நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச்சர்க்கரை, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Potato fry - Urulai kizhangu poriyal

Potato fry - Urulai kizhangu poriyal
Ingredients:

Potatos - Urulai Kizhangu - 1/4 kgRed chilly powder - Kaintha milagai thul - 1 table spoon
Corriander powder - Dhania thul - 2 table spoons
Turmeric powder - Manjal podi - 1 tea spoon
Mustard - Kadugu - 1 tea spoon
Cumin seeds - Jeeragam - 1 tea spoon
Asafoetida - Perungayam - a pinch
Salt to taste
Oil for frying

Method:

Wash and keep potatoes in pressure cooker or in oven. Amount of water for boiling potatoes is till all potatoes get immersed in water. Just leave for 2 whistles and simmer for 2 minutes then switch off the stove. Peel off the skin and cut into small cubes. Heat oil in a pan/kadai, splutter mustard seeds, cumin seeds, asafoetida and add boiled potatoes. Add red chilly powder, corriander powder, turmeric powder and little salt.

Potato fry is ready to be served. It can be served with any rice item. Serve hot. It can be served for 3 people. This can be prepared in 20 minutes.

Pidi Kozhukattai

Rice flour sweet - Pidi Kozhukattai


Ingredients:

Rice flour - Arisi mavu - 1 cup
Grated jaggery - Vellam thuriviyadu - 1 cup
Grated/Shredded coconut - Thuriviya thengai - 1/2 cup
Green gram dal - Pachai paruppu - 2 table spoons
Ghee - Nei - 2 table spoons
Salt - Uppu - a pinch

Method:

Fry rice flour in a kadai till nice aroma comes out. Fry for some 15 minutes in a low flame. Meanwhile grate the jaggery and keep ready. Add 1/4 cup of water in a kadai and add jaggery. Boil it till nice bubbles come.
Now remove the rice flour from the stove, add grated coconut, green gram dal powder - this has to be fried and made to a powder. Now add ghee and the jaggery. Mix them well. It should not be too thin or thick.
Now make small balls like how we make for chappathis. Then keep inside the palm and just press as shown in the picture. Apply little oil in idly plates/idly cooker and arrange these in that. Keep for some 10-15 minutes.
Tasty kozhukattais are ready to be served. It can be served for 3 people. It requires 30 minutes to cook.

Note: Add only 1/4 cup of water while heating jaggery beacuse jaggery will melt and become watery. So no need to add more water.

Cabbage fry - Muttakos poriyal

Cabbage fry - Muttakos poriyal

Ingredients:

Cabbage - Kos - 1/2 kg
Green peas - Pachai Pattani - small quantity
Green chillies - Pachai milagai - 3 nos.
Curry leaves - Karuvepilai - small quantity
Coriander leaves - Kothamali - small quantity
Grated/Shredded coconut - small quantity
Mustard seeds - kadugu - small quantity
Black gram dal - Ulutham parupu - 1 tea spoon
Salt to taste
Oil for frying

Method:

Wash and cut the vegetables. Boil it in a pressure cooker adding little salt and keep it aside. Boil green peas and keep ready.
Heat oil in a pan/kadai and splutter mustard seeds, black gram dal, green chillies, curry leaves and now add vegetable and green peas. Fry them well. Now add grated coconut. Add salt and garnish with coriander leaves.
Cabbage fry is ready to be served. Serve with any of rice varieties. It can be served for 2 people. It takes 30 minutes to cook.

Note: Cabbage should be cut finely. Add only little water and salt to cabbage. It requires only less quantity.

Optional: Green peas, onions can be added to taste. Ingredients can be added or removed according to individuals choice.

Raw Banana/Plaintain - Vazhaikai varuval

Raw Banana/Plaintain - Vazhaikai varuval

Ingredients:

Raw banana/Plaintain - Vazhaikai - 2 nos. (Medium)
Onion - Vengayam - 1 no.
Tomato - Thakkali - 1 no.
Garlic - Poondu - 3 nos.
Curry leaves - Karuvepilai - small quantity
Mustard - Kadugu - small quantity
Black gram - Ulutham paruppu - small quantity
Bengal gram - Kadalai paruppu - small quantity
Turmeric powder - Manjal thul - small quantity
Chilli powder - Milagai thul - 1 table spoon
Coriander powder - Dhania thul - 2 table spoons
Asafoetida - Perungayam - a pinch
Salt to taste
Oil for frying

Method:

Peel off the skin and cut raw bananas as shown in the picture and soak in warm water adding little salt and curd. Boil it for some 5 minutes either in pressure cooker or microwave oven.
Heat oil in a pan/kadai, splutter mustard, black gram, bengal gram, asafoetida, curry leaves, then onions followed by tomatoes and raw bananas, turmeric, chilly powder, coriander powder and little salt. Fry the vegetables nicely for some 20 minutes. Turn around all the curry so that the ingredients mixes well and the vegetable becomes crispy. Sprinkle little water if necessary.
Hot and tasty raw banana is ready to be served. It can be served for 3 people. It requires some 25 minutes to cook.

Note: Raw banana should not be ripen as it will not be nice to cook. Bananas must be soaked in water before boiling because it will become dark in colour if kept outside after peeling the skin.

Optional: Vegetable can be cut in any shape, in round or into small pieces. Its all individuals choice.

ஜவ்வரிசி அடை

ஜவ்வரிசி அடை

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி – இரண்டு கப்

பொட்டு கடலை – ஒரு கப் (மாவாக அரைத்து கொளல்வும்)

தேங்காய் துருவல் – அரை கப்

நெய் – அரை கப்

அரிசி மாவு – ஒரு கப்

கேரட் துருவல் – ஒரு கப்

வெங்காயம் – ஐந்து (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – அரை துண்டு (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – ஐந்து (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவைகேற்ப

செய்முறை

ஜவ்வரிசியை முதல் நாள் ஊறவைத்து, மறுநாள் பிழிந்து எடுத்து கொள்ளவும்.

இதனுடன், பொட்டு கடலை மாவு, தேங்காய் துருவல், நெய், அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்.

இந்த கலவையை அடை போல் தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றிலும் நெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

இனிப்பு சேவ்

இனிப்பு சேவ்

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – ஒரு கப்

சர்க்கரை – இரண்டு கப்

எண்ணெய் – தேவைகேற்ப

ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

நெய் – இரண்டு டீஸ்பூன்

செய்முறை

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு துளையுள்ள முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

சிவந்ததும் எடுத்து விரல் அளவுக்கு உடைத்து ஒரு பத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை, முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கம்பி பதம் பாகு வந்ததும் இறக்கி ஏலக்காய் தூள், நெய் ஊற்றி கலந்து அதில் சேவை போட்டு நன்றாக கலக்கவும்.

ஆறியதும் பரிமாறவும்.

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
உளுத்தம் மாவு - 1/4 கப்
கடலை மாவு - 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சுடுநீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம். பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!

சுரைக்காய் மசாலா

சுரைக்காய் மசாலா

சுரைக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சுரைக்காயை மசாலா போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இங்கு அந்த சுரைக்காய் மசாலாவின் செய்முறை தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிமையான செய்முறை. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சுரைக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு தயிரை நன்கு அடித்து, அத்துடன் சேர்த்து கிளறி, உப்பு தூவி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு மூடியை நீக்கிவிட்டு, சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

சைனீஸ் வெஜ் சூப்

சைனீஸ் வெஜ் சூப்

தேவையானவை:

பீன்ஸ் – 50 கிராம், கேரட் – ஒன்று, முட்டைகோஸ் – 100 கிராம், வெங்காயத்தாள் – ஒன்று, அஜினமோட்டோ – அரை டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக் கேற்ப.

செய்முறை:

அனைத்து காய்கறிகளையும் மெலிதாக ஒரே அளவாக நீட்டமாக (தீக் குச்சி போன்ற துண்டுகளாக) நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து… அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சோயா சாஸ் சேர்த்து குறைந்த தீயில் வேகவிடவும். கொதிவரும்போது, சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சூப்பில் சேர்க்கவும். இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, இறக்கிப் பரிமாறவும்.

சீரகம் – புழுங்கல் அரிசி கஞ்சி

சீரகம் – புழுங்கல் அரிசி கஞ்சி

தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒரு கப், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு – 25 கிராம், தயிர் – ஒரு கப் (கடைந்தது), உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் அடித்து ரவை போல உடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும். பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.

இஞ்சி – தக்காளிக்காய் சூப்

இஞ்சி – தக்காளிக்காய் சூப்

தேவையானவை:

இஞ்சிச் சாறு – கால் கப், தக்காளிக்காய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சூப் ‘ஸ்டாக்’ – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

ஸ்டாக் செய்ய:

வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று ஓமம் – ஒரு டீஸ்பூன் (ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி போட்டுக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, ஓமம் சேர்த்து காய்கறி மூழ்கும் அளவு நீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும்.வெந்ததும் கீழே இறக்கி வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை (ஸ்டாக்) சூப் செய்ய பயன்படுத்தலாம்).

செய்முறை:

சிறிய குக்கரில் வெண்ணெய் விட்டு பச்சைப் பட்டாணி, கீறிய பச்சை மிளகாயை வதக்கி, தேவையான அளவு `சூப் ஸ்டாக்’கை ஊற்றவும். கொதி வந்ததும் சீரகத்தூள், உப்பு சேர்த்து, இஞ்சிச் சாறு ஊற்றிக் கிளறி இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: ‘ஸ்டாக்’ செய்யப் பயன்படுத்திய காய் கறியை, வீணாக்காமல் சமையலில் சேர்க்கலாம்.

சேமியா தோசை

சேமியா தோசை

தேவையானவை:

சேமியா - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித்த தயிர் - கால் கப், பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, நைஸாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். சேமியாவை தயிரில் கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஊறவைத்த சேமியா, அரைத்த அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங் காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் திட்டமான பக்குவத்தில் கரைத்து தோசைகளாக வார்க்கவும். அளவாக எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
குறிப்பு: இந்த தோசைக்கு அதிக எண்ணெய் விடக் கூடாது.

பிரண்டை தோசை

பிரண்டை தோசை

தேவையானவை:

பச்சரிசி - 2 கப், புழுங்கலரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) - அரை கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.

கடலைமாவு தோசை

கடலைமாவு தோசை

தேவையானவை:

கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - அரை கப், எலுமிச்சம்பழம் - 1, பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடலைமாவு, அரிசிமாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சை சாறையும் விட்டு, தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக்கொண்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, புளித்த தயிர் - அரை கப், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, உப்பு - தேவையான அளவு, கேரட் - 1, உருளைக்கிழங்கு - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி.

தாளிக்க:

பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 3, ஏலக்காய் - 4, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். உருளைக்கிழங்கை சற்றுப் பெரிய துண்டுகளாகவும் கேரட்டை வட்ட வில்லைகளாகவும் நறுக்குங்கள். குக்கரை சூடாக்கி எண்ணெய், நெய் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, உடனே வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்குங்கள்.

பிறகு, நறுக்கிய காய்கறியை அதோடு சேர்த்து பத்து நிமிடம் நன்கு வதக்குங்கள். காய்கறி வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி + பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தயிர், எலுமிச்சம்பழச் சாறு, தேவையான உப்பு, பச்சை மிளகாய் (முழுதாக) சேர்த்து, 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடுங்கள். ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் இதில் சேருங்கள். குக்கரை மூடி, வெயிட் போடுங்கள். ஒரு விசில் வந்ததும் தீயை நன்கு குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். சூடான வெஜிடபிள் பிரியாணி ரெடி.

சௌசௌ பஜ்ஜி

சௌசௌ பஜ்ஜி

தேவையானவை:

சௌசௌ (சிறியதாக) - 1 , கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன், மைதா - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

சௌசௌவை தோல், விதை நீக்கி வில்லைகளாக நறுக்குங்கள். எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை மாவுடன் ஒன்றாக சேருங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சௌசௌ துண்டுகளை மாவில் நன்கு நனைத்து எடுத்து, எண்ணெயில் போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள். வித்தியாசமான பஜ்ஜி இது.

கடலைப்பருப்பு வெல்ல போளி

கடலைப்பருப்பு வெல்ல போளி

தேவையானவை:

கடலைப்பருப்பு - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதா - ஒண்ணே கால் கப், உப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், நெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மைதாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப்பருப்பை காய் பக்குவத்தில் வேக வைத்து வடிய வைக்கவும். ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் நன்றாக அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும். கெட்டியாக வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும். பிசைந்த மைதாவை சிறிது எடுத்து அப்பளம் போல் செய்து கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து மூடி, அப்பள குழவியால் போளி போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

ரவை போளி

ரவை போளி

தேவையானவை:

ரவை - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - கால் கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு டீஸ்பூ- ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:

மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி துண்டுகளை போடவும். உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்ல கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை விட்டு கலந்த பிறகே எண்ணெய் (அ) நெய் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மாவு சேர்ந்தாற்போல் வராமல் பிரிந்துவிடும்.

வெங்காய கொத்தமல்லி சட்னி

வெங்காய கொத்தமல்லி சட்னி

இட்லி, தோசை போன்றவற்றிற்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக வெங்காய கொத்தமல்லி சட்னியை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த வெங்காய கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4-5 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!

அரைக்கீரை மசியல்

அரைக்கீரை மசியல்

கீரை உடலுக்கு குளிர்ச்சியானது மட்டுமின்றி, உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை உள்ளடக்கியதும் கூட. அத்தகைய கீரையை வாரம் 2-3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் அரைக்கீரையை மசியல் செய்து சாதத்துடன் சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சரி, இப்போது இந்த அரைக்கீரை மசியல் எப்படி செய்வதென்று பார்ப்போம். குறிப்பாக இந்த மாதிரி சமைத்தால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை - 1 கட்டு (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

நெய் - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கீரையுடன சேர்த்து கலந்தால், அரைக்கீரை மசியல் ரெடி!!!

தினை தக்காளி தோசை

தினை தக்காளி தோசை

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அதிலும் தானியங்கள் கொண்டு செய்யப்படும் காலை உணவை உட்கொண்டால், இன்னும் நல்லது. அதில் அனைவருக்கும் கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் சப்பாத்தி மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் சோளம் மற்றும் தினை கொண்டு அருமையான சுவையில் தோசை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இந்த தோசை சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மேலும் இந்த தோசையை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சாப்பிட்டால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது அந்த தினை தக்காளி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்
சோளம் - 1 கப்
தினை - 1 கப்
தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சோளம் மற்றும் தினையை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு அரைத்துக் கொண்டு, தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும். பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான தினை தக்காளி தோசை ரெடி!!!

தேங்காய்ப்பால் தேன்குழல்

தேங்காய்ப்பால் தேன்குழல்

என்னென்ன தேவை?

பச்சரிசி 2 1/2 கப்,
முழு வெள்ளை உளுத்தம் பருப்பு 1/2 கப்,
தேங்காய்ப்பால் 1/2 கப்,
உப்பு சுவைக்கேற்ப,
சீரகம் 1 டீஸ்பூன்,
வெண்ணெய் 50 கிராம்,
பெருங்காயம் 1/2 டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் பொரிக்க.
எப்படிச் செய்வது?

அரிசியையும் பருப்பையும் மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். ஆறியதும், சலித்து, எல்லா பொருட்களையும் சேர்த்து, தேங்காய்ப்பாலை சிறிது சிறிதாக விட்டு நன்றாக கட்டியில்லாமல் கெட்டியாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு, தேங்காய் எண்ணெயில் பிழியவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

புதினா - காலிஃப்ளவர் மஞ்சூரியன்

புதினா - காலிஃப்ளவர் மஞ்சூரியன்

தேவையானவை:

நல்ல வெண்மையாக இருக்கும் காலிஃப்ளவர் - ஒன்று, புதினா - 2 கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சோள மாவு - 2 டீஸ்பூன், மைதா - முக்கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

காலிஃப்ளவரை சின்னச் சின்ன பூக்களாக எடுத்து... சிறிதளவு உப்பு கலந்த நீரில் போட்டு, 10 நிமிடம் வேகவைத்து நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கொஞ்சம் உப்பு, தேவையான நீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும். வேகவைத்த காலிஃப்ளவர் பூக்களை ஒவ்வொன்றாக இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், காய்ந்த மிளகாயை லேசாக வறுக்கவும். பொடிப் பொடியாக நறுக்கிய புதினா, பொரித்த காலிஃப்ளவர் பூக்கள் சேர்த்துக் கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து வறுத்த காலிஃப்ளவர் மீது புதினா நன்றாக சேரும்படி கிளறவும். நீர் நன்கு வற்றிய பின் இறக்கவும்.

இது... சப்பாத்தி, பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

கடலைப்பருப்பு அல்வா

கடலைப்பருப்பு அல்வா

தேவையானவை:

கடலைப்பருப்பு - 200 கிராம், வெல்லம் - 300 கிராம், புழுங்கல் அரிசி - ஒரு கப், பால் - ஒன்றரை கப், துருவிய தேங்காய் - 2 கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 8 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10 (துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்), சிவப்பு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

புழுங்கல் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, தேங்காய் சேர்த்து நைஸாக அரைக்கவும். கடலைப்பருப்பை அளவான நீர் விட்டு வேகவைக்கவும். அரைத்த அரிசி மாவுடன் பால் சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து நன்றாக கிளறி, ஓரளவு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பையும் அதில் சேர்த்துக் கிளறவும். பிறகு, துருவிய வெல்லம், சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும். இடையிடையே நெய் விட்டுக் கிளறி, இறுதியில் ஏலக்காய்த்தூள், ஃபுட் கலர் சேர்க்கவும். பளபளவென்ற பதம் வந்ததும் இறக்கி, முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

கடலைப்பருப்பு - அப்பளப்பூ கூட்டு

கடலைப்பருப்பு - அப்பளப்பூ கூட்டு

தேவையானவை:

கடலைப்பருப்பு - 100 கிராம், அப்பளப்பூ - 15, தக்காளி, பெரிய வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), எண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

தேங்காய் துருவல் - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கசகசா - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

தக்காளி, பெரிய வெங்காயம், இஞ்சியை நறுக்கிக்கொள்ளவும். கடலைப்பருப்பை சுண்டலுக்கு வேகவைப்பது போல் வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, அரை டம்ளர் நீர் விட்டு... மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கொதிக்கவிடவும். இரண்டு கொதி வந்ததும் வெந்த கடலைப்பருப்பை போட்டு, மேலும் ஒரு கொதி வந்ததும் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வெந்ததும் இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அப்பளப்பூவைப் பொரித்து எடுத்து அதில் சேர்க்கவும்.

இதை சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.

கடப்பா

கடப்பா

தேவையானவை:

பயத்தம்பருப்பு - 100 கிராம், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா ஒன்று, பூண்டு - 4 பல், காய்ந்த பட்டாணி - 25 கிராம் (ஊற வைக்க வும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கசகசா, பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்த பொடி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக் கொள்ள:

தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு.

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:

பயத்தம்பருப்பைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு... நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து, ஊற வைத்த பட்டாணியும் சேர்த்து குழைந்து விடாமல் வேகவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி, வெந்த பருப்புக் கலவையை சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்த பிறகு அரைத்து வைத்த விழுது, வறுத்துப் பொடித்த மசாலா பொடி சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

இது, இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

தேவையானவை:

காய்ந்த மொச்சைக்கொட்டை - ஒரு கப், மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - 2 டம்ளர், வெல்லம் - சிறிதளவு, பூண்டு - 10 பல், தேங்காய் அரைத்த விழுது - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், வெங்காய வடகம் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மொச்சைக்கொட்டையை 6 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேகவிடவும். புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பூண் டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சேர்க்கவும். மொச்சைக் கொட்டை, வெல்லம் ஆகியவற்றை அதில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வரும்போது, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து, குழம்புடன் சேர்த்துப் பரிமாறவும்.

துவரை சில்லி கோஃப்தா

துவரை சில்லி கோஃப்தா

தேவையானவை: -

குழம்புக்கு: புளிக்கரைசல் - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், தக்காளி - 2, எண் ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: காய்ந்த மிளகாய் - 8, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு.

கோஃப்தாவுக்குத் தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய பூண்டு பற்கள் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகாரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதில் பூண்டு, பெரிய வெங்காயம், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். இதை தேவையான சைஸில் உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும். இதுதான் கோஃப்தா.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் போட்டு வதக்கி... உப்பு சேர்த்து, புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும். தக்காளி வெந்து கரைந்த பிறகு, அரைத்து வைத்த விழுதை கொதிக்கும் புளிக்கரைசலில் ஊற்றவும். எல்லாமாகச் சேர்ந்து கொதித்து வந்ததும் இறக்கிவிடவும் (இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டீஸ்பூன் சில்லிசாஸ் ஊற்றினால் நன்கு சேர்ந்தாற்போல வரும்). தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும். பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கலந்துவிடவும். அரை மணி நேரம் இந்த உருண்டைகள் ஊறியதும் பரிமாறவும்.

வெரைட்டி பஜ்ஜி

வெரைட்டி பஜ்ஜி

தேவையானவை:

கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், குடமிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், பஜ்ஜி மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வில்லை வடிவமாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து... காய்கறியை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

விருப்பமான காய்கறிகளை பயன்படுத்தி பஜ்ஜி தயாரிக்கலாம். தேங்காய் சட்னி, சாஸ் இதற்கு சரியான காம்பினேஷன்.

மாங்காய் சாதம்

மாங்காய் சாதம்

தேவையானவை:

அரிசி - 250 கிராம், மாங்காய் - ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன் பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காயைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பொட்டுக்கடலை, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் தாளிக்கவும். சாதத்துடன் உப்பு, மாங்காய் துருவல் சேர்த்துக் கலந்து, தாளித்ததையும் சேர்த்து நன்கு கலந்து, கொத்தமல்லி சேர்க்கவும்.

துவரை மொச்சை கிரேவி

துவரை மொச்சை கிரேவி

தேவையானவை:

உரித்த துவரைக்காய், தோல் உரித்த மொச்சை ­- தலா ஒரு கப், தக்காளி - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

துவரை, மொச்சை இரண்டையும் தேவையான உப்பு சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து, வேக வைத்த மொச்சை - துவரையுடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, துவரை, மொச்சை கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

உடனடி உப்புமா

உடனடி உப்புமா

தேவையானவை:

அரிசி மாவு 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, புளித்த மோர் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசிமாவுடன் மோர், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பிசைந்து வைத்த மாவில் பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து கடாயில் சேர்க்கவும். உதிரி உதிரியாக வரும்வரை நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: திடீர் விருந்தினர்களை சமாளிக்க இந்த உப்புமா உதவும்.

வெங்காய துவையல்

வெங்காய துவையல்

தேவையானவை:

சின்ன வெங்காயம் (உரித்தது) - 20, காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், புளி - ஒரு சிறிய நெல்லிக் காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து... புளி, உப்பு, வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு: இதை சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்குக்கும் சிறந்த சைட் டிஷ்.

பாசிப்பருப்பு பெசரட்

பாசிப்பருப்பு பெசரட்

தேவையானவை:

புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். தோசைக்கல்லில் அரைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பாசிப்பருப்பு வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.

எள்ளுப்பொடி ரைஸ்

எள்ளுப்பொடி ரைஸ்

தேவையானவை:

அரிசி - 250 கிராம், எள்ளு - 100 கிராம், உளுத்தம்ருப்பு - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி, ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எள்ளைத் தனியாக வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். இதை சாதத்துடன் சேர்த்து, உப்பு போட்டு, எண்ணெய் விட்டு கலக்கவும்.

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை:

ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

பனீர் பேபிகார்ன் ரோல்

பனீர் பேபிகார்ன் ரோல்

தேவையானவை:

பனீர் - 100 கிராம், பேபிகார்ன் சீவிய தூள் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரி மாவு தயாரிக்க:

மைதா மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், ரவை - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பேபி கார்ன் சீவிய தூள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து, துருவிய பனீர் போட்டு கலந்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தூவி கலந்து கொள்ள... ஃபில்லிங் மசாலா ரெடி!

பூரி மாவுக்கு கொடுத்துள்ளவற்றை பிசைந்து மெல்லிய பூரிகளாகத் தேய்த்து, நடுவில் பாதி அளவில் ஃபில்லிங் மசாலாவை வைத்து, இறுக்கமாக ரோல் செய்யவும். பிறகு ரோலின் இருபுறமும் கொஞ்சம் நறுக்கி இரு ஓரங்களையும் நன்கு அழுத்தி ஒட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தயார் செய்துள்ள மசாலா ரோலைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதைப் போல எல்லாவற்றையும் தயார் செய்து பொரித்து எடுக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி, தக்காளி கெட்சப் சிறந்த சைட் டிஷ்.

பன்னா

பன்னா


தேவையானவை:

புளிப்பில்லாத மாங்காய் - 2, சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன், கொரகொரப்பாக பொடித்த முந்திரி - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மாங்காய்களைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு, இறக்கி ஆறவைத்து தோலை உரித்து, கைகளால் மசித்து எடுக்கவும் (கொட்டையை நீக்கி விடவும்). இத்துடன் 2 கப் தண்ணீர், சர்க்கரை, பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து `ஜில்லென பரிமாறவும்.

நன்னாரி சர்பத்

நன்னாரி சர்பத்

தேவையானவை:

நன்னாரி வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) - 2 கப், சர்க்கரை - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - 2, சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை.

செய்முறை:

நன்னாரி வேரை, தண்ணீரில் கழுவி எடுத்து, பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடிவைக்கவும்.

சர்க்கரையை வேறொரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து, கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். சிவப்பு ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். நன்கு ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நன்னாரி வேர் கொதித்த தண்ணீரை வடிகட்டி, இத்துடன் சேர்த்துக் கலக்கவும். இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவையானபோது, இந்த ஜூஸை கால் கப் எடுத்து முக்கால் கப் குளிர்ந்த நீர் சேர்த்து அருந்தலாம். துருவிய இஞ்சி சிறிதளவு சேர்ப்பது, கூடுதல் சுவை தரும்.

மாங்காய் - பருப்பு குழம்பு

மாங்காய் - பருப்பு குழம்பு

தேவையானவை:

மாங்காய் - ஒன்று, துவரம்பருப்பு - கால் கப், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - சிறு துண்டு (பொடிக்கவும்), பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மாங்காயைத் தோல் சீவி, சிறுசிறு வில்லைகளாக நறுக்கிக்கொள்ளவும். துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேகவைக்கவும். வெந்த மாங்காயுடன் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து... உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். குழம்பு கெட்டியானவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும்.

வேப்பம்பூ ரசம்

வேப்பம்பூ ரசம்

ரசத்தில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் அனைவரும் செய்வது புளி ரசம், தக்காளி ரசம் தான். ஆனால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ரசம் செய்ய நினைத்தால், வேப்பம்பூ ரசத்தை செய்து சாப்பிடுங்கள். இந்த ரசம் உடலில் உள்ள பூச்சிகள், புழு போன்றவற்றை அழித்துவிடும். மேலும் இதனை மதிய வேளையில் உணவிற்கு முன் சூப்பாகவும் குடிக்கலாம். சரி, இப்போது அந்த வேப்பம்பூ ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

புளி - 1 எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நன்கு கனிந்தது)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பம்பூவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை தண்ணீரில் போட்டு உப்பு ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் மிளகு, சீரகம், வர மிளகாய் மற்றும மல்லி சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளி தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

பிறகு தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதி லவறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கி, அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் வேப்பம்பூவில் உள்ள கசப்பு அதிகமாக இறங்காமல் இருக்கும். இறுதியில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சேர்த்தால், சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி!!!