மாம்பழ குல்பி

சூப்பரான... மாம்பழ குல்பி

குழந்தைகளுக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு மாம்பழத்தைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே! அதிலும் இந்த மாம்பழ குல்பி செய்வது என்பது மிகவும் எளிது. இப்போது அந்த மாம்பழ குல்பியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்
கன்டென்ஸ்ட்டு மில்க் - 1/2 கப்
மாம்பழ கூழ் - 1 கப்
பால் பவுடர் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால், கன்டென்ஸ்ட்டு மில்க், சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விட்டு, அடுப்பை அணைத்து, அதனை குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை குல்பி கிண்ணத்திலோ அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான வடிவில் இருக்கும் கிண்ணத்திலோ ஊற்றி, குச்சியை நடுவில் வைத்து, 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைத்து, பின் வெளியே எடுத்து குளிர வைத்து, கிண்ணத்தில் இருந்து எடுத்து பரிமாறினால், சூப்பரான மாம்பழ குல்பி ரெடி!!!