தேங்காய் - மாங்காய் - பட்டாணி சாதம்

தேங்காய் - மாங்காய் - பட்டாணி சாதம்

தேவையானவை:

பச்சரிசி - 2 கப், மாங்காய் - ஒன்று (பெரியது), தேங்காய் - அரை முடி, பச்சைப் பட்டாணி - 200 கிராம், கேரட் - ஒன்று (சிறியது), இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 10, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி, உதிர் உதிராக சாதம் வடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை ஆவியில் வேகவைத்து தனியே வைக்கவும். தேங்காயை பல்லு பல்லாக மிகவும் சிறிதாக நறுக்கி வைக்கவும். கேரட்டை பொடியாக நறுக்கி வைக்கவும். மாங்காயைத் தோல் சீவி, துருவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். பின்பு எண்ணெயில் கடுகை சேர்த்து, பொரிந்ததும் கடலைப்பருப்பு போட்டு, சிவந்ததும் மாங்காய் துருவல், சேர்த்து வதக்கவும். இதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போட்டு.... நறுக்கிய இஞ்சி, கேரட், கறிவேப்பிலை, தேங்காய்த் துண்டுகள், வெந்த பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, சாதத்தைப் போட்டுக் கிளறி, வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.