வெண்டைக்காய் புளிக்குழம்பு
வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் (எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 6-10
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து 7-10 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!