கொரியண்டர் பனீர்
தேவையானவை:
பனீர் - 200 கிராம்
மாவுக் கலவை:
மைதா மாவு - 75 கிராம்
கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்
உப்பு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை சாஸ்:
கொத்தமல்லித்தழை - அரை கட்டு
பூண்டு - 8 பல்
பச்சைமிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி
(சாறு எடுத்துக்கொள்ளவும்)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கலக்கிய மாவில் பனீரை முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸுக்கு தேவையானவற்றில் உள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லித்தழை, பூண்டு, பச்சைமிளகாய், ஆகியவற்றை மிக்ஸியில் தண்ணீர் இன்றி நன்றாக அரைத்து எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும். பனீரை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற நன்கு வதக்கவும். இத்துடன் மிக்ஸியில் அரைத்த கலவையைச் சேர்த்து பச்சைவாசனை போக நன்கு வதக்கவும். பிறகு சோயா சாஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலவை கொதித்து பச்சை வாசனை போனதும், பொரித்தெடுத்த பனீரை இதில் சேர்த்து நன்கு வதக்கவும். கலவை நன்கு சுண்டி வரும் போது இறக்கி கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறலாம்.