ரவை போளி

ரவை போளி

தேவையானவை:

ரவை - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரி துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - கால் கப் , ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், மைதாமாவு டீஸ்பூ- ஒரு கப், கோதுமைமாவு - கால் கப், உப்பு - கால் டீஸ்பூன்.

செய்முறை:

மைதாமாவு, கோதுமைமாவு, உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் ஊற்றி, கெட்டியாக பிசைந்து நெய் தடவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரி துண்டுகளை போடவும். உடனே, ரவையைப் போட்டு, சிவக்க வறுத்து தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். இந்த வெல்ல கரைசலை ரவையில் கொட்டி, கெட்டியாகக் கிளறி இறக்கி ஏலக்காய்த்தூளை சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய அப்பளங்களாக இட்டு, அதில் ரவை பூரணத்தை வைத்து மூடி போளி போல் தட்டி, தோசைக் கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: மாவு பிசையும்போது முதலில் தண்ணீரை விட்டு கலந்த பிறகே எண்ணெய் (அ) நெய் சேர்க்க வேண்டும். இல்லையென்றால், மாவு சேர்ந்தாற்போல் வராமல் பிரிந்துவிடும்.