ரவா டோக்ளா
தேவையானவை:
ரவை - 200 கிராம், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரூட் சால்ட் (டிபார்ட்மென்ட் கடைகளிள் கிடைக்கும்) - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கடுகு - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (கீறவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, கேரட் துருவல், தேங்காய்த் துருவல், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, எண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
குக்கரில் ஒரு கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். ரவை, கடலை மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் - இஞ்சி் விழுது, ஃப்ரூட் சால்ட், சமையல் சோடா ஆகியவற்றை ஒன்று சேர்த்து, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாகக் கரைக்கவும். இதை எண்ணெய் தடவிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் இருக்கும் கொதிநீரில் வைத்து மூடி, வெயிட் போடாமல் 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து, ஆறிய பின் வில்லைகள் போடவும். இதுதான் டோக்ளா.
கடுகு, பச்சை மிளகாயை எண்ணெயில் தாளித்து, டோக்ளாவின் மீது ஊற்றி... கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல், கேரட் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். எலுமிச்சைச் சாறை பரவலாக ஊற்றிப் பரிமாறவும்.