இஞ்சி – தக்காளிக்காய் சூப்

இஞ்சி – தக்காளிக்காய் சூப்

தேவையானவை:

இஞ்சிச் சாறு – கால் கப், தக்காளிக்காய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சூப் ‘ஸ்டாக்’ – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

ஸ்டாக் செய்ய:

வெங்காயம் – ஒன்று, உருளைக்கிழங்கு – ஒன்று ஓமம் – ஒரு டீஸ்பூன் (ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை தோல் சீவி சதுரமாக நறுக்கி போட்டுக்கொள்ளவும் வெங்காயத்தை நறுக்கி சேர்த்து, ஓமம் சேர்த்து காய்கறி மூழ்கும் அளவு நீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும்.வெந்ததும் கீழே இறக்கி வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை (ஸ்டாக்) சூப் செய்ய பயன்படுத்தலாம்).

செய்முறை:

சிறிய குக்கரில் வெண்ணெய் விட்டு பச்சைப் பட்டாணி, கீறிய பச்சை மிளகாயை வதக்கி, தேவையான அளவு `சூப் ஸ்டாக்’கை ஊற்றவும். கொதி வந்ததும் சீரகத்தூள், உப்பு சேர்த்து, இஞ்சிச் சாறு ஊற்றிக் கிளறி இறக்க வும். கொத்தமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: ‘ஸ்டாக்’ செய்யப் பயன்படுத்திய காய் கறியை, வீணாக்காமல் சமையலில் சேர்க்கலாம்.