வெரைட்டி பஜ்ஜி

வெரைட்டி பஜ்ஜி

தேவையானவை:

கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், குடமிளகாய், வெங்காயம், கத்திரிக்காய், கேரட், வாழைக்காய், பஜ்ஜி மிளகாய் - தலா ஒன்று, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். காய்கறிகளை வில்லை வடிவமாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து... காய்கறியை கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்துப் போட்டு, வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

விருப்பமான காய்கறிகளை பயன்படுத்தி பஜ்ஜி தயாரிக்கலாம். தேங்காய் சட்னி, சாஸ் இதற்கு சரியான காம்பினேஷன்.