பாசிப்பருப்பு பெசரட்

பாசிப்பருப்பு பெசரட்

தேவையானவை:

புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - 100 கிராம், பாசிப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து... காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். தோசைக்கல்லில் அரைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: பாசிப்பருப்பு வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணமுடையது.