பூரி கார ரோல்ஸ்
தேவையானவை:
பொரித்த பூரிகள் - 6, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு, தோல் நீக்கி, துருவவும்), கேரட் - ஒன்று (துருவவும்), லவங்கம் - 6, பனீர் துருவல், மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய், உப்பு - சிறிதளவு.
செய்முறை:
நெய்யில் கேரட் துருவலை வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு துருவல், மிளகுத்தூள், உப்பு, பனீர் துருவல் சேர்க்கவும். இந்தக் கலவையை பூரிகளில் தடவி சுருட்டி, பிரிந்துவிடாமல் இருக்க லவங்கத்தால் குத்தி வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.